மகளின் காதலனோடு ஓரினச் சேர்க்கை..! தந்தையின் 32 ஆண்டு கால திருமண வாழ்க்கை நொறுங்கிய பரிதாபம்!

லண்டன்: பிரிட்டனின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி தற்போது பிரிந்துள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் பேர்ரி ட்ரூவிட் பார்லோவ் (50 வயது) மற்றும் டோனி (55 வயது). இவர்கள் 2 பேரும் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக, சட்டப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆண்கள் இருவரும் ஃபுளோரிடாவுக்கு இடம்பெயர்ந்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், யார் கண் பட்டதோ தற்போது புதிய சிக்கல் அவர்களின் திருமண வாழ்வில் ஏற்பட்டுள்ளது.

ஆம், இவர்கள் 5 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். அந்த குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையும் அடக்கம். அந்த பெண் குழந்தை வளர்ந்து தற்போது ஸ்காட் என்ற 25 வயது இளைஞனை காதலிக்கிறார்.  

காதல் விவகாரத்திற்காக ஸ்காட் அடிக்கடி பேர்ரி - டோனி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். ஸ்காட் இருபால் உறவில் ஆர்வம் உள்ளவர் எனக் கூறப்படுகிறது. அதாவது, ஆண், பெண் என யார் கிடைத்தாலும் கேப்பில் கிடா வெட்டுபவர். அப்படியான ஸ்காட் மீது திடீரென பேர்ரிக்கு காதல் மலர்ந்துள்ளது. தன்னைவிட 25 வயது குறைவான இளைஞன் அதுவும் தனது மகளின் காதலன் என்றும் பாராமல் ஸ்காட் கூட நெருங்கிப் பழக தொடங்கிய பேர்ரி, அதன் விளைவாக டோனியுடனான திருமண வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளார்.

ஆம், பேர்ரி, டோனியை விவகாரத்து செய்கிறார். ஆனாலும், அவர்கள் ஒரே வீட்டில்தான் வசிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதன்படி, 3 ஆண்களும் ஒரே வீட்டில் குடும்பத் தலைவர்களாக, தங்களது 5 குழந்தைகளை பராமரிக்க உள்ளனர்.  

இன்னொரு சுவாரஸ்யமான விசயம் என்னவெனில், இளைஞன் ஸ்காட் ஒரே நேரத்தில் தனது காதலிக்கு காதலனாக, காதலியின் தந்தைக்கு கணவனாக ஒரே வீட்டில் வாழப் போகிறார். இவ்வளவு நாள் குடும்பத் தலைவராக இருந்த டோனி, விவாகரத்து பெற்றாலும் அதே வீட்டில் பாதுகாவலர் போல வாழ்வார்.