வெறும் 10 ஆயிரம் முதலீடு..! 4 வருடங்களில் கோடிக்கணக்கில் டர்ன் ஓவர்! ஆட்டுப் பாலால் சாதித்த வில்வா அம்ரிதா..! எப்படி தெரியுமா?

பொறியாளர் பெண்ணொருவர் இயற்கையாகவே நறுமண பொருள்கள் மற்றும் சோப் முதலியவற்றை தயாரித்து வரும் செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருத்திகா. இவருடைய வயது 32. இவர் இயற்கை காஸ்மெடோலஜி என்ற பிரிவில் ஆன்லைன் டிப்ளோமா பட்டம் பெற்றவர். இவருடைய கணவரின் பெயர் குமார். இவர் ஆஸ்திரேலியா நாட்டில் எம்பிஏ பட்டம் பெற்றவர். 2017-ஆம் ஆண்டில் டிப்ளோமா முடித்த கையோடு தன்னுடைய சொந்த தொழிலை கிருத்திகா துவங்கினார்.

அதாவது ரசாயன பொருட்களின் சேர்க்கையின்றி இயற்கையாகவே சருமத்திற்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட தொடங்கினார். வெறும் 10,000 முதலீட்டுடன் இந்த தொழிலை கிருத்திகா தொடங்கினார். முதலில் காசிபாளையம் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமாக ஒரு ஆட்டு பண்ணையை உருவாக்கினர்.

அந்த ஆட்டுப் பண்ணையில் இருந்து பெறப்படும் பாலை குளிரில் அழுத்தி சோப்புகளில் தன்னுடைய சமயலறையிலேயே கிருத்திகா உருவாக்க தொடங்கினார். இந்த பண்ணைக்கு "வில்வா பண்ணை" என்று பெயர் சூட்டினார்‌. வெறும் 2 ஆடுகளுடன் தொடங்கிய இந்த பண்ணையில், அப்போது நூற்றுக்கணக்கான ஆடுகள் உள்ளன. 

கொஞ்சம்கொஞ்சமாக பரிசோதனையில் முன்னேற்றம் அடைந்த பின்னர், குடும்பத்திற்கு என்று தனி ஒரு சரும ரெசிபியை உருவாக்கினார். அதே பயன்படுத்திய பிறகு நன்றாக இருந்ததால் அதையே வாடிக்கையாளர்களுக்கும் விற்க முடிவெடுத்தனர். தொடக்கத்தில் மிகவும் சிறிதாக தொடங்கப்பட்ட தொழில் பின்னர் ஆன்லைன் விற்பனையில் கால்பதித்தது. விற்பனையின் மூலம் நிறைய வாடிக்கையாளர்களை இவர்களால் கவர்ந்திழுக்க முடிந்தது.

ரசாயனங்கள் இல்லாத பெர்ஃப்யூம், சோப், பாடிலோஷன், ஃபேஸ் வாஷ், க்ரீம் முதலியவற்றை தரமாக தயாரித்து வருகின்றனர். தற்போது ஆன்லைன் மூலம் வணிகம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அமேசான் போன்ற இ-காமர்ஸ் சேவைகளின் மூலம் மக்கள் இவர்களுடைய தயாரிப்புகளை அதிகளவில் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இத்தகைய சரும பொருட்களுக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் பண்ணையிலிருந்து கிடைப்பதாகவும், சில பொருட்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது. மேலும், ஈரோட்டிலிருந்து முருங்கை எண்னெய், காஷ்மீரிலிருந்து லாவண்டர் எண்ணெய் மற்றும் கேரளாவில் இருந்து எலுமிச்சம்புல் என்னை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டு தயாரிப்பு பணிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன

இந்த தொழிலின் தற்போதைய விற்றுமுதல் 15 கோடியாகும். பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் இருந்து தொடங்கப்பட்ட இந்த தொழில் 2 ஆண்டுகளிலேயே, 15 கோடி விற்றுமுதல் எட்டியிருப்பது சுயதொழில் தொடங்க முனைவோருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இந்த தொழிலை தொடங்குவதற்கு தன்னுடைய தாயார் தான் காரணம் என்று ரித்திகா கண்கலங்கினார். அதாவது பல ஆண்டுகளுக்கு முன்னர் சர்ம பிரச்சினையின் காரணமாக அவருடைய தாயார் இறந்து போனதாகவும், அப்போதிலிருந்தே சருமத்தில் பயன்படுத்தும் பொருட்கள் இயற்கையானதாக தான் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டதாகவும் கூறினார்.

இவருடைய வளர்ச்சியை அப்பகுதி மக்கள் பெரிதளவில் வியந்து பாராட்டி வருகின்றனர்.