கைகளில் 12 விரல்கள்..! கால்களில் 20 விரல்கள்..! மொத்தம் 32 விரல்கள்! கூன் விழுந்த முதுகு..! வெளிறிய பார்வை! அச்சுறுத்தும் சூனியக்காரி! ஆனால்?

கை கால்களில் மொத்தம் 32 விரல்களுடன் இருக்கும் மூதாட்டியை ஒட்டுமொத்த கிராமமே சேர்ந்து சூனியக்காரி என ஒதுக்கி வைத்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.


ஒடிசா மாநிலம் கஞ்சாம் பகுதியைச் சேர்ந்த நாயக் குமாரி என்ற 23 வயது மதிக்கத்தக்க மூதாட்டிக்கு இரு கைகளிலும் 12 விரல்களும், கால்களில் தலா பத்து விரல்கள் என மொத்தமாக 32 வீரர்கள் இருக்கின்றன. 

பிறவியிலிருந்தே இந்த குறைபாடு இவருக்கு இருப்பதால், சிறுவயதிலிருந்தே இவரை சூனியக்காரி என ஒட்டுமொத்த கிராமமே ஒதுக்கி வைத்து பார்க்கிறது. இவருடன் ஊர் மக்கள் யாரும் சகஜமாக இதுவரை பழகியதில்லை. 

இதுகுறித்து மனமுடைந்து பேசிய மூதாட்டி கூறுகையில், இத்தனை விரல்களுடன் பிறந்த என்னை சூனியக்காரியாக இந்த ஊர் மக்கள் பார்க்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். 

இந்த ஒரு காரணத்திற்காக சிறுவயதிலிருந்தே என் வயது இருப்பவர்களிடம் நான் சகஜமாக பழகியதில்லை. என்னிடம் பழகவும் அவர்களின் பெற்றோர்கள் விட்டதில்லை. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன். எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் சென்று கலந்து கொண்டதில்லை.  

இன்றளவும் என்னை இந்த ஊர் மக்கள் ஒதுக்கி வைத்து பார்க்கிறார்கள். என்னிடம் போதுமான பொருளாதார வசதி இல்லாததால், என்னை சரி செய்து கொள்ள என்னால் முடியவில்லை என்றார்.  

இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, இது மரபணு குறைபாடு காரணமாக ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை ஏதேனும் ஒருவருக்கு மட்டும் வரக்கூடிய குறைபாடு ஆகும். பெரிய நோய் ஒன்றும் இல்லை என்றனர்.