இடுப்பில் திடீர் வலி..! கதறிய 31 வயது பெண்..! கிடுகிடுவென குறைந்த எடை..! உருவத்தை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

லண்டன்: இடுப்பில் ஏற்பட்ட அதீத சதை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவரின் கண்ணீர் கதை பற்றியதே இந்த செய்தியாகும்.


பிரிட்டனைச் சேர்ந்தவர் கோலே இவான்ஸ் லிப்பெட் (31 வயது). இவருக்கு ஒரு அரிய வகை உடல் பாதிப்பு கடந்த 2012ம் ஆண்டில் ஏற்பட்டது. இதன்படி, இடுப்பு பகுதியில் திடீரென சதை மடிப்புகள் ஏற்பட்டு, அது பல்கி பெருக ஆரம்பித்தது. இதனால், அவரது உணவுக்குழாய் உள்ளிட்ட அனைத்து உடல் ரீதியான இயக்கங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

உடலைச் சுற்றி ஏற்பட்ட சதை மடிப்புகளால் அவரது முதுகெலும்பு, இடுப்பு எலும்பு அனைத்தும் பாதிக்கப்பட்டதோடு, இயங்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். ஒரு நாளில் 20 முறை அவரது இடுப்பு எலும்பை சதை வளர்ச்சி நெட்டி தள்ளும். இதனால் கடும் வலி ஏற்படுவதோடு, எலும்புகளும் உடைந்துவிடும்.  

ஜாஸ் பாடகராக இருந்த அவர் ஒருகட்டத்தில் வேலைக்கே செல்ல முடியாமல் போனது. பிறகு, இதுதொடர்பாக மருத்துவர்கள் உதவியை நாடிய கோலேவுக்கு, அறுவை சிகிச்சை செய்து, சதை வளர்ச்சி நீக்கப்பட்டது. இதன்காரணமாக, அவரது உணவுக்குழாய் முற்றிலுமாக சேதமடைந்து, புதியதாக ட்யூப் ஒன்றை பொருத்த வேண்டியதானது.


தற்போது அவர் படுத்த படுக்கையாக, ட்யூப் மூலமாகவே திரவ உணவுகளை சாப்பிடுகிறார். இந்த அறுவை சிகிச்சையால், கொழுக் மொழுக் என்றிருந்த கோலே, தனது உடல் எடையில் பெரும் பகுதியை இழந்து, தற்போது ஒல்லிக்குச்சியாக தோற்றமளிக்கிறார். ‘தற்போதுதான் என்னால் நல்ல முறையில் உட்கார முடிகிறது, நடக்க முடிகிறது,’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.