பெண் புலியை அடித்தே கொன்றே கிராமத்து மக்கள்..! - உ.பி. பரிதாபம்

கிராமத்துவாசி ஒருவரை தாக்கிய பெண் புலியை கிராம மக்கள் அனைவரும் தடியால் அடித்து கொன்ற சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோ. லக்னோவில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் பிலிபித் புலிகள் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு அருகே மெய்டோனா என்ற கிராமம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அருங்காட்சியிலிருந்த 6 வயது இளம் பெண் புலி ஒன்று கிராமத்து நபரை தாக்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாக்கிய பெண் குறியை கொடூரமாக தாக்கியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவை கண்ட வன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காட்டு விலங்கு துன்புறுத்தியதற்காகவும், இந்திய நாட்டின் தேசிய விலங்கான புலியை அடித்து கொன்றதற்காகவும் 31 கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.