கடந்த 4 ஆண்டுகளில் 3000 கேரளப் பெண்கள் தங்கள் கணவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.
3000 கணவன்கள்! 4 ஆண்டுகள்! கேட்போரை அதிர வைக்கும் செக்ஸ் டார்ச்சர்! கேரள பெண்கள் கூறும் பகீர் புகார்!

தற்போது 49 வயதாகும் சுதாவுக்கு 24 வயதில் திருமணமான நிலையில் அதற்கு 5 ஆண்டுகளுக்குப் பின் அரசு வேலை கிடைத்தது. தொடக்கத்தில் தனது மனைவி பிற ஆண்களுடன் பேசுவதை இயல்பாகவே எடுத்துக்கொண்ட சுதாவின் கணவனுக்கு நாட்கள் செல்லச் செல்ல அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
விளைவு... சுதாவை அவரது இணக்கம் இன்றியே அவரது கணவன் அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. சுதாவின் நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்த நேரத்திலும் அவரை வலுக்கட்டாயமாக தனியாக அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது இருவருக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுதாவின் பெயரில் கடன் பெற்று அவரது கணவர் பெயரில் வாங்கிய வீட்டின் ஒரு பகுதியில் சுதா தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்த வகையில் கணவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் குறித்து மதுர்பூமி செய்தி நிறுவனம் குடும்ப வன்முறை தொடர்பான கவுன்சிலிங் நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்திய ஆய்வில் 4 ஆண்டுகளில் 3265 பேர் கணவனின் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
2015 - 16-ஆம் ஆண்டுகளில் பதிவான 6051 குடும்ப வன்முறைகளில் 716 வழக்குகள் கணவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுடையவை 2016 - 17-ஆம் ஆண்டுகளில் பதிவான 6,022 விவாகரத்து வழக்குகளில் 4500 வழக்குகள் கணவர்களால் வன்முறைக்கு ஆளான பெண்களுடையவை அதில் 854 பாலியல் வன்முறைகள்
2017 - 18-ஆம் ஆண்டில் 6305 குடும்ப வன்முறை வழக்குகளில் 912 வழக்குகள் கணவர்களின் பாலியல் வன்முறை தொடர்பானவை. 2018 - 19-ஆம் ஆண்டுகளில் 5025 குடும்ப வன்முறைகளில் 700 வழக்குகள் கணவர்களின் பாலிய வன்முறை தொடர்பானவை