சவப்பெட்டிக்குள் செய்யுற வேலையா இது? உலகம் முழுவதும் பரபரப்பாக்கிய சம்பவம்!

கொலம்பியாவில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இரண்டு சவப்பெட்டியில் இருப்பதை பார்த்துள்ளனர். அதை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


கொலம்பியாவில் இருந்து வெனிசுலா பகுதியை நோக்கி உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் மையம் ஒன்று அமைந்துள்ளது. அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் இரண்டு சவப்பெட்டிகள் இருப்பதை பார்த்துள்ளனர். இந்நிலையில் சவப்பெட்டிகள் கடைக்கு எடுத்துச் செல்வதாக அதிலிருந்து ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பெட்டியை திறந்து காட்டும்படி கூறியுள்ளனர். இதையடுத்து முதல் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் எதுவும் இல்லை இந்நிலையில் ஓட்டுநர் இரண்டாவது பெட்டியைத் திறந்து காட்ட மறுத்துள்ளார்.  

இந்நிலையில் அவர் மீது பெரும் சந்தேகம் வலுக்கவே போலீசார் எச்சரிக்கை செய்யவே இரண்டாவது பெட்டியைத் திறந்து காட்டி உள்ளார். அதில் சுமார் 300 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்துள்ளது. இந்நிலையில் வாகனத்தை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரையும் கைது செய்த போலீசார் கஞ்சா கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மற்றும் கடத்தி வந்த வாகனத்தின் எண்ணை வைத்து அந்த வாகனத்தின் உரிமையாளரை அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவரை கைது செய்த பின்னர்தான் இந்த வாகனம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. மற்றும் கஞ்சாவை யாருக்காக கடத்தி சென்றுள்ளனர். என்பது குறித்து முழு விவரம் கிடைக்கும் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.