திருமணம் ஆன நபர் 18 வயது பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டதால் பெண்ணின் தாயே அவரை கொலை செய்த சம்பவம் மகராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது.
18 வயது மகளுடன் தகாத உறவு..! கெஞ்சிய தாய்..! கேட்காத 30 வயது பாபு..! பிறகு அரங்கேறிய பயங்கரம்!
மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 20ம் தேதி முதல் மாயமானர். இது குறித்து அவரது மனைவி தந்த புகாரில் தேடப்பட்டு வந்த நிலையில், தானே மாவட்டம் சகாப்பூா் பகுதியில் பாபு சடலமாக மீட்கப்பட்டார். பாபுவை கொலை செய்தவர்கள் யார் என கண்டறிவதில் சிரமம் நிலவியது. இதையடுத்து பாபுவுடன் பழகியவர்கள் யார் யார் என போலீசார் பட்டியல் தயாரித்தனர். அதில் 18 வயது பெண்ணுடன் பழகுவதை கண்டுபிடித்தனர்.
இது பிடிக்காத அந்த பெண்ணின் தாய்தான் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கொலையாளி , பாபுவிற்கு திருமணம் ஆன நிலையில் தன்னுடைய மகளுடன் முறையற்ற வாழ்வு வாழ்ந்தான். எனவே என்னுடைய மகளை தொல்லை செய்யாதே என பல முறை கூறினேன். ஆனால் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து 4 பேருடன் சேர்ந்து குடிபோதையில் இருந்த பாபுவை ஆட்டோவில் கடத்தினேன். பின்னர் பாபுவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை சகாப்பூர் பகுதியில் வீசி விட்டு தப்பி விட்டோம்.
பெண்ணின் தாய் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய தலைமறைவான மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.