செல்போன ஏன்டா திருடுன? 30 வயது இளைஞரின் பிறப்பு உறுப்பை பொசுக்கி 6 பேர் செய்த பகீர் செயல்! அதிர வைக்கும் காரணம்!

கேரளாவில் பிக்பாக்கெட் அடித்ததாக கூறி ஒருவரின் பிறப்புறுப்பை எரித்து கொலை செய்த 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பயணிகளின் செல்போன்கள் மற்றும் பர்ஸ்களை திருடியதாக கூறி, 30 வயதான ஒருவரை ஏழு பேர் சேர்ந்து பிறப்புறுப்பிலேயே சூடான கம்பியை கொண்டு சூடு வைத்துள்ளனர்.  

ஏறக்குறைய பிறப்புறுப்பு முழுதுமே தீக்காயத்தால் பாதிப்பிற்கு உள்ளாகி அந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியது. அதை வைத்து ஐந்து பேரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், "பிறப்புறுப்பு ஏறக்குறைய 50 சதவீதத்திற்கும் மேல் எரிந்து விட்டது. உடலின் மற்ற பகுதிகளிலும் தீக்காயம் இருக்கின்றது. இதனாலேயே பாதிக்கப்பட்டவர் உயிர் இழந்திருக்க கூடும். விரைவில் மீதமுள்ள 2 பேரை பிடித்து விடுவோம்" என தெரிவிக்கப்பட்டது.