4நாட்களில் 4 மருத்துவர்கள்..! ஆனாலும் தூக்கத்திலேயே பறிபோன 30 வயது இளைஞரின் உயிர்! கதறும் கர்ப்பினி மனைவி! பதற வைக்கும் காரணம்!

4 நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த நபர் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கேரள மாநிலம் எடப்பாள் பகுதியில் வசித்து வந்தவர் பிரசாந்த். இவரது மனைவி பிரசவம் காரணமாக சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார் பிரசாந்த். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள எடப்பாள் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு நெஞ்சு வலிக்கு சில மாத்திரைகள் கொடுத்தனுப்பியதாக தெரிகிறது. மறுநாளும் நெஞ்சுவலி வர வேறு ஒரு மருத்துவரை அணுகி உள்ளார். அவரும் சாதாரண வலி மாத்திரை கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனாலும் குணம் ஆகவில்லை. இதேபோல் தொடர்ந்து 4 நாட்கள் அலைந்துள்ளார் பிரசாந்த். பின்னர் சென்னையில் இருக்கும் மனைவியை பார்ப்பதற்காக பிரசாந்த் சென்றார்.

பின்னர் சில விருந்து நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மீண்டும் எடப்பாள் சென்றுள்ளார் பிரசாந்த். இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் எடப்பாள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பிரசாந்த்.

4 நாட்களாக மருத்துவமனைக்கு அலைந்த நிலையில் வெறும் சாதாரண வலி மாத்திரை தந்ததாலேயே பிரசாந்த் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றறம் சாட்டி உள்ளனர். முதல் நாள் சென்றபோதே உரிய சிகிச்சை அளித்திருக்கலாம் மருத்துவர்கள் இப்படி அலட்சியமாக நடந்துகொள்வது ஏன் என கேள்வி எழுப்பினர்