ஒரு மாதத்திற்கு முன்னர் மாயமான இளம் பெண்! அழுகிய நிலையில் சடலமாக மீட்பு! பதற வைக்கும் காரணம்!

திருவனந்தபுரம்: கடந்த ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் ராக்கி. 30 வயதான இந்த பெண்ணை, கடந்த ஒரு மாதமாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், ஜூன் 21ம் தேதியன்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், ராக்கியின் முன்னாள் காதலன் அகில் உள்ளிட்ட 3 பேர் மீது சந்தேகமடைந்தனர்.

இதில், அகில், அவனது சகோதரன் ராகுல் தலைமறைவான நிலையில், அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆதர்ஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவனை விசாரித்தபோது, ராக்கியை  கொன்று திருவனந்தபுரம் அருகில் உள்ள அம்பூரி என்ற பகுதியில் புதைத்துவிட்டதாக, தெரிவித்தான். உடனே, அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார் அழுகிய நிலையில், அங்கிருந்து ராக்கியின் சடலத்தை தற்போது மீட்டுள்ளனர். 

அகிலுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதனை ராக்கி எதிர்த்துள்ளார். தன்னை திருமணம் செய்ய அவர் வலியுறுத்தியதாகவும், இதனால், அகில், ராகுல் மற்றும் ஆதர்ஷ் ஒன்றுசேர்ந்து ராக்கியை கொன்று புதைத்துவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே தலைமறைவாக உள்ள அகில் மற்றும் ராகுலை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக,  போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.