30 ஆண்டுகளாக ஓசி! வாடகை கேட்டால் மிரட்டல்! இளையராஜாவின் அடாவடி! புலம்பும் பிரசாத் ஸ்டூடியோ!

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ மோதல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு முற்றிவிட்டது.


அன்னக்கிளியில் வெற்றிக்கொடி நாட்டிய பிரகு இளையராஜா ஏ.வி.எம் 'சி' ஸ்டுடியோவைத்தான் தனது பாடல் ரெக்கார்டிங்குகளுக்கு பயன்படுத்தி வந்தார்.அவ்வப்போது பாடகர் ஜேசுதாசுக்குச் சொந்தமான கோதண்டபாணி ஸ்டுடியோவிலும் ஒலிப் பதிவு செய்வார்.

ஆனால்,ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு புதுமுக இயக்குநர் இளையராஜாவைத் தாக்கியது முதல் சம்பவம்.அடுத்தது தமிழக அரசு மதுவுக்கு எதிராக விசு இயக்கத்தில் 'நீங்க நல்லா இருக்கனும்' என்று ஒரு பிரச்சாரப் படம் எடுத்தது.அதன் த்வக்கவிழாவுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வந்தபோது போலீசார் இளையராஜாவை ஏ.வி.எம் ஸ்டுடியோ வாசலில் நிறுத்தி , அவரை அங்கிருந்து நடந்து போகச் சொன்னது.

இந்த நிகழ்ச்சிகக் இளையராஜாவின் தன்மானத்தை பாதித்து இருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும்,பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளருமான எல்.வி பிரசாத்,இளையராஜாவை அழைத்து தனது ஸ்டுடியோவை பயன்படுத்திக்கொள்ள கொடுத்தார்.அதன் பிறகு முப்பது வருடங்களுக்கு மேலாக இலவசமாகவே அந்த ஸ்டுடியோவைப் பயன்படுத்தி வந்தார்.

அதுமட்டுமின்றி அங்கே பணியாற்றும் சவுண்ட் இஞ்சினியர்,உதவியாளர்கள் அனைவருக்கும் ஸ்டுடியேவே சம்பளம் கொடுத்து வந்ததுடன்,கரண்ட் பில் வரை கட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.எல்.வி பிரசாத் மறைவுக்குப் பிறகு ஸ்டுடியோ அவரது பேரன் சாய் பிரசாத் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

இதற்குள் சினிமாவில் நிறைய தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டு எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது.பிரசாத் நிர்வாகமும் கார்பரேட் மயமாகிவிட்டது.பிரமாண்டமான பழைய படப்பிடிப்பு தளங்கள்,ப்ராஸ்ஸிங் லாப்,ரெக்கார்டிங் ஸ்டுடியோ போன்றவற்றால் எந்த வருமானமும் இல்லாத நிலையில் அவற்றை பராமரிக்க வருடந்தோறும் கோடிக்கணக்கில் செலவிட வேண்டி இருந்ததால் சாய் பிரசாத் சில தீவிர முடிவுகளை எடுத்தார்.

அதில் ஒன்றுதான் பல ஆண்டுகளாக இளையராஜா இலவசமாகப் பயன்படுத்தும் ஸ்டுடியோவின் விவகாரம்.அந்த ஸ்டுடியோவைத்தான் இளையராஜா,அவரது மகன்கள் கார்த்திக் ராஜா,யுவன் சங்கர் ராஜா மூவருமே பயன்படுத்தி வருகிறார்கள்.அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய போது ' உங்களுக்கு எவளவு வாடகை வேண்டுமென்று சொல்லுங்கள், நான் தருகிறேன்' என்று இளையராஜா சொன்னாராம்.

அதைத் தொடர்ந்து மாதம் 6 லட்ச ரூபாய் வாடகை என்றும்,சவுண்ட் இஞ்சினியர் உட்பட ஊழியர் சம்பளம்,மின்சாரக்கட்டனம் உள்ளிட்டவற்றை இளையராஜா செலுத்த வேண்டும் என்று முடிவானது.ஆனால்,பேசியபடி இளையராஜா நடந்து கொள்ளாததால் அந்த ஸ்டுடியோவின் ஒரு பகுதியில் இருபது கணினிகளை கொண்டுவந்து வைத்திருக்கிறது நிர்வாகம்.

இதைத் தொடர்ந்து 'இளையராஜாவை இசையமைக்க விடாமல் இடையூறு செய்வதாக ' ,அவரது உதவியாளர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.இதைத் தொடர்ந்து இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிவாகம் துரிதப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.