வேலூருக்கு 30 அமைச்சர்கள்! 200 தொகுதிப் பணியாளர்கள்! அள்ளி வீசப்படும் பணம்.! ஏ.சி.சண்முகம் கரை சேர்வாரா?

வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் பிஜேபியைத் தள்ளி வைத்துவிட்டு பிரச்சாரம் செய்கிறது அதிமுக.


 முப்பது மந்திரிகள் முகாமிட்டிருக்கிறார்கள்.திமுக 70 பொறுப்பாளர்களை நியமித்தால்,அதிமுக 200 பேரை நியமிக்கிறது.காசும் அள்ளி வீசப்படுகிறது.இந்த ஒரு இடத்தில் வென்றாலும் ஏ.சி சண்முகம் அதிமுக கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் அது தங்களுக்குத்தான் லாபம் என்பதால் பிஜேபி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆறு சட்ட மன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. 1,வேலூர்,2,அணைக்கட்டு,3,கே.வி குப்பம்,4,குடியாத்தம்,5,வாணியம்பாடி, 6, ஆம்பூர்.இதில் 2016 சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் அதிமுகவும்,இரண்டில் திமுகவும் வென்றிருந்தன.அதில் குடியாத்தம் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் புண்ணியத்தில் பதவியை பறிகொடுக்க சமீபத்திய இடைத்தேர்தலில் அந்த இரண்டு தொகுதிகளையும் திமுக கைப்பற்றி விட்டது.

இப்போது ஆறில் நான்கு தொகுதிகள் திமுகவிடமும்,இரண்டு மட்டும் அதிமுகவிடமும் இருக்கின்றன. அந்த நம்பிக்கையில் திமுக தெம்பாக நிற்கிறது.அதிமுக பதட்டப்படுகிறது.5ம் தேதி நெருக்கத்தில் இன்னும் காசை இறைக்கும் அதிமுக.ஆனால்,கஞ்சத்தனத்தில் பெயர் போன துரைமுருகன் மகனுக்காக அதை எதிர்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் துரைமுருகன் காசு செலவழிக்கவில்லை என்றால் சண்முகம் வெற்றி பெறலாம் என்பதுதான் நிலவரம்.