கொட்டித் தீர்த்த கனமழை! பூமிக்குள் புதைந்த அடுக்குமாடி குடியிருப்பு! 50 பேர் கதி என்ன?

பூனேவில் குடியிருப்பு க்கு அருகில் கட்டப் பட்டிருந்த 30 அடிச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.


மகாராட்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் பூனேவிலும் இரண்டு நாட்களாக மழை வெளுத்துக் கொண்டிருக்கிறது. அங்கு அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

இதற்காக அதற்கு அருகிலேயே கூடாரம் அமைத்து தொழிலர்கள் பணியாற்றி வருகின்றனர். கனமழை பெய்து வந்த நிலையில் சுற்றுச் சுவர் அப்படியே பூமிக்குள் புதைந்தது. மேலும் குடியிருப்பின் ஒரு சுவர் இடிந்து விழுந்து கூடாரத்தில் உள்ள 17 பேர் உயிரிழந்தனர்.

பூனேவில் குடியிருப்பு பகுதியில் 30 அடி சுவர் கட்டப்பட்டு இருந்தது. அது எதிர்ப்பாராத விதமாக இடிந்து விழ 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்ட நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்தது.

மேலும் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளாக சிலர் சிக்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது..