பவர் கட்..! இருளில் மூழ்கிய கிராமங்கள்..! கண்டுகொள்ளாத அதிகாரிகள்! களம் இறங்கிய இளைஞர்கள் 3 பேர் பலியான பரிதாபம்!

மின்சாரம் தாக்கி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை எனும் இடம் அமைந்துள்ளது. கோதையாறு, குற்றியார், மாறமலை, தச்சமலை, முடவன்பொற்றை ஆகிய கிராமங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பகுதியில் அமைந்துள்ளன. குற்றியாறு கிராமத்தில் நேற்றிரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. 

நெடுநேரமாகியும் மின்சாரம் வராததால் அந்த கிராமத்தின் சஜின் சலோ என்ற 22 வயது இளைஞர், தன் நண்பர்களான சுபாஷ் (20) மற்றும் மன்மதனை (25) அடைத்துக்கொண்டு குற்றியாறு பகுதிக்கு மின்சாரம் வரும் ஜீரோபாயிண்ட் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அமைந்துள்ள மின்மாற்றியில் குற்றியாருக்கு வரும் மின் சப்ளையை சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக அவர்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த பேச்சிப்பாறை காவல்துறையினர் 3 பேர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.