என் மனைவிக்கும் இன்னொருத்தனுக்கும் பிறந்த குழந்தை..! அதான் அப்டி செஞ்சேன்..! கணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை 2வது கணவன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.


சென்னை சித்தாலப்பாக்கத்தில் கேரளாவை சேர்ந்த கங்கா என்பவர் கட்டிடத் தொழில் வேலை செய்து வந்தார். கணவனை இழந்த கங்கா தனது 3வயது மகனுடன் வசித்து வந்த நிலையில் வெங்கடேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 3 வயது குழந்தையை பார்க்கும் வெங்கடேசனுக்கு ஏதோ நெருடல் ஏற்பட்டுள்ளது. முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை தான் ஏன் வளர்க்க வேண்டும் என யோசனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவசர வேலை காரணமாக, கங்கா கேரளாவுக்கு செல்ல நேர்ந்தது. இதனால் மகனை வெங்கடேசனை பார்த்து கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.  

இதற்கிடையே குடிபோதையில் இருந்த வெங்கடேசன் பக்கத்து வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த குழந்தையை இழுத்து கொண்டு வந்து சரமாரியாக அடித்துள்ளான். அப்போதும், ஆத்திரம் தீரமால் காலால் 3 வயது குழந்தை எனப் பாராமல் அருணை எட்டி எட்டி உதைத்துள்ளான்.

இதனால் நிலைகுலைந்து விழுந்த அருணின் தலை, தரையில் மோதி ரத்தம் வரத் தொடங்கியது. இதனால் பயந்துபோன வெங்கடேசன், அருணை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தான். ஆனால் மருத்துவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கள்ளக்குறிச்சிக்கு ஒடிவிட்டான். மனைவி கங்காவுக்கு போன் செய்து குழந்தை அடிபட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளான்.  

சென்னை வந்த கங்கா கணவன் அங்கு இல்லாததால் சந்தேகம் அடைந்தார். தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சொல்லி, வெங்கடேசன் மீது புகார் சொன்னார். இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சியில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்தனர்.

நீண்ட நாட்களாக சித்தி கொடுமை கேட்டிருப்பீர்கள். இது சித்தப்பாவின் கொடுமை !