3 வயது குழந்தை கடத்தல்! பலாத்காரம்! பிறகு தலையை துண்டித்த கொடூரம்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் பகுதியில் 3 வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குற்றவாளியை ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி மூலம் போலீசார் கைது செய்துள்ளனர்.


ஜார்கண்ட் மாநிலத்தில் இரவில் தனது பெற்றோருடன் உறங்கி கொண்டு இருந்த குழந்தை காலை எழுந்தவுடன் திடீரென காணவில்லை இந்நிலையில் அதிர்ச்சியடைந்த  பெற்றோர்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ள நிலையில் அக்குழந்தையின் பெற்றோர்கள் தங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் குழந்தையை தேடி பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். இந்நிலையில் குழந்தையை ரயிலில் கொண்டு சென்று இருக்கலாம் என சந்தேகத்தை போலீசார் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் சென்று சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்துள்ளனர் இந்நிலையில் மூன்று நபர்கள் குழந்தையை வாயை மூடி  தூக்கி வருவது அங்குள்ள கேமராவில் தெளிவாக படம் எடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வீடியோவை அக்குழந்தையின் பெற்றோர்களிடம் காட்டிய போது அதில் ஒரு நபரை அவர்களுக்கு அடையாளம் தெரிந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை ரயில்வே நிலையத்திற்கு 4 கிலோ மீட்டர் அருகில் உள்ள ஒரு சேரியில் உள்ள முட்புதரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் உடல் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் அங்கு சென்று பார்த்தபோது அந்தக் குழந்தை தங்கள் குழந்தைகள் என பெற்றோர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். அந்த இடத்தில் தனது குழந்தையின் உடலைப் பார்த்து உடனே அவரது தாய் அதே இடத்தில் கதறி அழுதுள்ளார். 

இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவர்தான் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர் என உறுதி செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மூவரும் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து தலையை துண்டித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். குழந்தையை கடத்தி சென்ற ஒரு தனி அறையில் வைத்து குழந்தையைத் துன்புறுத்தி மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் பிறகு குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தலையை துண்டித்து விட்டதாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

குழந்தையின் உடலில் உள்ள காயத்தை வைத்து பார்க்கும்போது குழந்தை அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது இதையடுத்து குழந்தையின் தலையை மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கிற்காக மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களின் மீது பாலியல் குற்ற பிரிவு வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.