2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை..! 35 அடி உயரம்..! ஆனாலும் உயிர் பிழைத்த அதிசயம்! பரபரப்பு வீடியோ!

2 வது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை அதிசயமாக காயமின்றி உயிர் தப்பிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் ஒரு வீட்டின் 2 வது மாடியில் 3 வயது குழந்தை உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து அதாவது 35 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக அந்த குழந்தை தரையில் விழாமல் அப்போது அந்த வழியே வந்த சைக்கிள் ரிக்ஷா ஒன்றின் மெத்தை மீது விழுந்தது.

சரியான நேரத்தில் அந்த ரிக்ஷா அந்த இடத்தை கடந்ததால் குழந்தை காயம் இன்றி உயிர் தப்பியது. 2 வினாடிகள் தாமதமாக ரிக்ஷா வந்திருந்தாலும் குழந்தைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.பின்னர் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஈசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

தற்போது அந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கையில் கடவுள் போல் ரிக்ஷா ஓட்டுநர் வந்ததால் தங்களது குழந்தை காப்பற்றப்பட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் இனிமேல் குழந்தையை ஜாக்கிரதையா பார்த்துக் கொள்வதாகவும் கூறி ரிக்ஷா ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தனர்.