காணாமல் தேடப்பபட்ட சிறுமி. திடீரென பிணமாக மிதந்த துயரம்

மாயமான 3 வயது சிறுமியை காவல்துறையினர் சடலமாக மீட்டெடுத்த சம்பவமானது ஆஸ்திரேலியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியாவில் நூசா என்ற பகுதி அமைந்துள்ளது. இதற்கருகே கூத்தாராபா என்ற இடம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமியொருவர் திங்கட்கிழமை பிற்பகல் காணாமல் போனார். அவருடைய பெயர் எல்லி. குழந்தையின் பெற்றோர் சிறிது நேரம் தேடி அலைந்தனர். குழந்தை கிடைக்காத காரணத்தினால் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் பணியை விரைந்து மேற்கொண்டனர். குழந்தையின் பெற்றோர் ஃபேஸ்புக்கிலும் தங்கள் குழந்தையை காணவில்லை என்று பதிவு செய்திருந்தனர். இதனால் தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எல்லியின் வீட்டுக்கு அருகேயுள்ள அணைக்கட்டில் தேடிய போது குழந்தையை சடலமாக மீட்டெடுத்தனர். 

இந்த சம்பவம் குறித்து எல்லியின்  அத்தை கூறுகையில், "எல்லி மிகவும் சுறுசுறுப்பானவர். சம்பவத்தன்று பிற்பகலில் அவள் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அவளுடைய தாயார் சமைத்து கொண்டிருந்த போது எல்லி மாயமானார். எல்லியின்‌ தாயார் பல முறை கருச்சிதைவுக்கு பிறகு எல்லியை பெற்றெடுத்தார். இது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.