உடம்பெல்லாம் சிகரெட் சூடு! தலையில் ரத்த காயம்! 3 வயது குழந்தைக்கு தாயின் 2வது கணவனால் நேர்ந்த பயங்கரம்!

3 வயது குழந்தையானது தலையில் காயங்களுடன், உடலில் சிகரெட் சூட்டுடன் உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் துர்கா. துர்காவின் வயது 26. 6 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சத்தியமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதியினருக்கு அருண் என்ற 5 வயது மகனும், வரலட்சுமி என்ற 3 வயது மகளும் உள்ளனர். 4 வருடங்களுக்கு முன்னர் சத்தியமூர்த்தி ஒரு சாலை விபத்தில் இறந்துள்ளார். 

அதன் பின்னர் துர்கா 2 குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்துள்ளார். அப்போது துர்காவுக்கு வெங்கடேசன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அப்போது இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

தன்னுடைய மகளை துர்கா கேரளா மாநிலத்தில் தன்னுடைய தங்கையின் வீட்டில் விட்டு வளர்த்துள்ளார். மகன் மற்றும் துர்கா வெங்கடேசனுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்கள் கழித்து கேரளாவில் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக துர்கா சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளார். திடீரென்று ஒரு நாள் வெங்கடேசன், அருண் இறந்துவிட்டதாக துர்காவிடம் தெரிவித்துள்ளார். அலறி அடித்து கொண்டு துர்கா சென்னைக்கு வந்தார்.

அப்போது அருணின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக துர்கா குழந்தையின் மரணத்தில் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதாவது, குழந்தையை வற்புறுத்தி மது அருந்த வைத்ததும், சிகரெட்டால் குழந்தையை சுட்டதும் என்று பல்வேறு வகையில் அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர் மது போதையில் குழந்தையை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

உடனடியாக காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.