ஆபத்தான வகையில் திறந்திருந்த பாதாள சாக்கடை! நொடிப் பொழுதில் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! பதற வைக்கும் சம்பவம்!

மூடப்படாதிருந்த சாக்கடையில் 3 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவமானது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சாலை பணிகளை மேற்கொள்ளாமல் அஜாக்கிரதையாக செயல்படுவதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சீனா நாட்டில் சமீபத்தில் இது போன்ற சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.

சீனா நாட்டு ஷ்ங்யீ எனும் நகரம் அமைந்துள்ளது. நகரத்தின் மெயின் ரோட்டில் தந்தையொருவர் தன் 3 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். ரோட்டில் சரியாக மூடப்படாத இருந்த சாக்கடையின் மேல் குழந்தை கால் வைத்துள்ளது. மூடாதிருந்ததால் குழந்தை சாக்கடையில் தவறி விழுந்துள்ளது.

சம்பவத்தை கண்ட குழந்தையின் தந்தை பேரதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் சாக்கடை குழிக்குள் கையைவிட்டு சாதுரியமாக குழந்தையை வெளியே எடுத்தார். எந்த ஒரு காயமும் இன்றி குழந்தை உயிர் பிழைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகும். 

தந்தை தன் 3 வயது குழந்தையை சாக்கடை குழியில் இருந்து மீட்ட சம்பவமானது வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது ஷ்ங்யீ நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.