வீடு கட்ட தோண்டிய பள்ளம்! மழை நீரால் நிரம்பி 3 வயது குழந்தையை காவு வாங்கிய பயங்கரம்! கதறிய தாய்! பண்ருட்டி அதிர்ச்சி!

மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து 3 வயது குழந்தை இறந்து சம்பவமானது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் கப்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு மகாராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாய தொழில் மேற்கொண்டு வருகிறார். இவருடைய  மனைவியின் பெயர் பிரியா. இத்தம்பதியினருக்கு அஸ்விதா என்ற 10 வயது மகளும், பவளவேனி என்ற 3 வயது மகளும், ரீபிகா என்ற 10 மாத குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக அணைவரும் பிரியாவின் சொந்த ஊரான பண்டர்க்கோட்டைக்கு சென்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் அனைவரும் கொண்டாடினர். நேற்று கப்பூருக்கு கிளம்பி கொண்டிருந்தபோது பிரியாவின் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. 

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு பிரியா அழைத்து சென்றார். தன்னுடைய குழந்தைகளை செல்வி என்ற உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு பிரியா சென்றிருந்தார்.  பவளவேனி தனியாக நடந்து தன்னுடைய பாட்டியின் வீட்டிற்கு செல்வதற்காக நடுரோட்டில் வந்தாள். இவர்களது வீட்டிற்கு அருகே லட்சுமி என்பவர் வீடு கட்டிக்கொண்டிருந்தார்.‌ மணல் எடுப்பதற்காக தோண்டப்பட்டிருந்த 5 அடி குழியில் பவளவேனி தவறி விழுந்தாள். 

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் பவளவேனியை பிரியா தேடியுள்ளார். குழந்தை எங்கும் கிடைக்காததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது குழந்தை அந்த பள்ளத்தில் விழுந்து இருந்ததை கண்டு பதறியடித்து கொண்டு கத்தினார்.

குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.