மார்பில் 5 அங்குலத்திற்கு புற்று நோய் கட்டி! காப்பாற்ற போராடும் பெற்றோர்! உதவிக் கரம் நீட்டுவீர்களா?

மனிதர்கள் அவதிப்படும் கொடிய நோய்களுள் தலையாயது புற்றுநோய்.


இந்த நோய்யை வயது முதிர்ந்தவர்களாலேயே தாங்கிக்கொள்ள இயலாது.அவ்வாறிருக்கும் பட்சத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வயது சிறுவன் புற்றுநோயை எதிர்த்து போராடி வருகிறான். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனையம் என்ற பகுதியை சேர்ந்தவர் மரியம் ஜான்.

இவருக்கு திருமணமாகி 3 வயதில் குழந்தை ஒன்றுள்ளது. அந்த குழந்தையின் பெயர் பிரஜின் என்பதாகும். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மார்பு பகுதியில் ஐந்து சென்டிமீட்டர் அளவில் புற்றுநோய் கட்டி உள்ளது. இதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும்  தனியார் மருத்துவமனையில் இதனை சரிசெய்ய  4 லட்சம் கேட்டுள்ளனர்.

வருமையில் சிக்கித்தவிக்கும் ஜான் குடும்பத்தால் அந்த தொகையை திரட்ட இயலவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் அவரால் இயன்ற உதவியை செய்து தருமாறு பிரஜினின் பெற்றோர் மனு ஒன்றை அளித்துள்ளனர். கண்டிப்பாக பிரஜின்க்கு மாவட்ட ஆட்சியர் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.