3 பெண்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டு அரை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவமானது பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி, மொட்டை அடித்து சிறுநீரை குடிக்க வைக்கப்பட்ட 3 பெண்கள்..! பதற வைக்கும் காரணம்!

பிகார் மாநிலத்தில் முசாஃபர்பூர் மாவட்டம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட டாகர்மா என்ற கிராமத்தில் மூன்று பெண்கள் வசித்து வந்தனர். அவர்களை பார்த்த பொதுமக்களில் சிலர் மந்திரவாதிகள் என்று தவறாக எண்ணியுள்ளனர். உடனடியாக அப்பெண்களிடம் தகாத முறையில் பேச தொடங்கியுள்ளனர்.
பிகார்னர் அவர்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்துள்ளனர். பின்னர் அவர்களை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி மூவரையும் கட்டாயப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை இருசக்கர வாகனத்தில் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொடர்புடையவர்களாக 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.