தோழியின் கள்ளக் காதலனை போலீஸ் வேடத்தில் கடத்தி 3 பெண்கள் செய்த பகீர் செயல்! சென்னை அதிர்ச்சி!

தோழியின் கள்ளக்காதலுக்கு உதவுவதற்காக 3 பெண்கள் காவல் துறையினர் போல் மாறுவேடம் அணிந்து நாடகமாடிய சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் கிஷோர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அதே ரயில் நிலையத்தில் வதணி என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இதனிடையே வதணிக்கும், இருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சக ஊழியர்கள் நினைத்துள்ளனர். ஏனென்றால் வதணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

இதனால் கிஷோர் மற்றொரு ஊழியரான சுபாஷினியிடம் நெருக்கமாக பழகி வந்தார். இது வதணிக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்துவதற்காக தனது தோழியான முத்துலட்சுமியின் உதவியை நாடியுள்ளார். 

அதன்படி முத்துலட்சுமி, தன்னுடன் மேலும் 2 பெண்களை சேர்த்துக்கொண்டு சுபாஷினியின் மிரட்டுவதற்காக நேற்று வாடகை காரில் கிண்டி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

சுபாஷினி பார்த்தவுடன் போலி வேடம் அணிந்து இருந்த மற்ற 2 பெண்கள் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு சுபாஷினி மறுத்ததால் போலி காவலர்கள் சுபாஷினி வலுக்கட்டாயமாக காருக்குள் அழைத்து செல்ல முயன்றனர். சுபாஷினி உடனடியாக அலற தொடங்கினார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்ட ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அவரை காப்பாற்றுவதற்காக விரைந்து வந்தனர்.

நிலைமையை சுதாரித்துக்கொண்ட பெண் காவலர்கள் உடனடியாக தப்பி முத்துலட்சுமியுடன் காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர். வாடகை காரின் ஓட்டுநர் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டார். சுபாஷினி அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வாடகைக்கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தன்னுடைய பெயர் ஜீவானந்தம் என்று குறிப்பிட்ட அவர், உண்மையான காவலர்கள் என்று நினைத்துதான் வண்டியில் ஏற்றியதாக கூறியுள்ளார். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு மற்ற 3 பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, தோழியின் கள்ளக்காதலுக்கு உதவுவதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறியுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை 4 பெண்களையும் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.