எடப்பாடியின் தோல்விக்கும் ஸ்டாலின் வெற்றிக்கும் காரணமாக தினகரன் இருப்பார் என்றுதான் பலரும் நம்பிவந்தார்கள். அதற்கு ஏற்ப, தினகரன் செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து நின்றார்கள். அடேங்கப்பா என்று சொல்லும்வகையில் அயராது தினகரனும் உழைத்தார்.
3 சீட்டு தினகரன்! பரிசுப் பெட்டியை சவப்பெட்டியாக்கிய மக்கள்!
அதைவிட, இரண்டு பெரிய கட்சிகளுக்கு இணையாக தினகரனும் மக்களுக்குப் பணம் கொடுத்தார். ஆனால், மூணே மூன்று தொகுதியில் மட்டும்தான், அதுவும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியில் மட்டும்தான் அ.தி.மு.க. வெற்றியை தினகரனின் அ.ம.மு.க. பாதித்துள்ளது.
ஆம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சாத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும்தான் இவரது வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு பாதித்துள்ளது. மற்ற இடங்களில் அ.ம.மு.க.வின் ஓட்டுக்களால் யாருக்குமே எந்தப் பாதிப்புமே இல்லை.
சிரிச்சி சிரிச்சி பேசுகிறார், என்ன கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்கிறார். அவரை யாராலும் கேள்வி கேட்டு மடக்கமுடியாது. மனுஷனுக்கு கோபமே வரமாட்டேங்குதய்யா.... என்றெல்லாம் புகழ்ந்த மக்கள் ஓட்டுப் போட வரவில்லை. ஆம், அவரது பரிசு பெட்டியை சவப்பெட்டியாக மாற்றிவிட்டார்கள்.
இப்படித்தான் வடிவேலுக்கும் கூட்டம் கூடி கும்மியடிச்சது, அந்த வகையில் அடுத்த வடிவேலு அண்ணன் தினகரன்தான்.