பாத்திமா லத்தீப்புக்கு நீதி வேண்டும்..! சென்னை ஐஐடி மாணவிக்காக ஒன்று சேர்ந்த இந்தியா! ஏன் தெரியுமா?

ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் 3 பேராசிரியர்களுக்கு தொடர்பு இருக்கும் செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கிண்டியில் ஐஐடி கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் ஹ்யுமாணிடீஸ் (Humanities) பிரிவில் பாத்திமா லத்தீப் என்ற மாணவி எம்.ஏ பட்டம் படித்து வந்தார். கல்லூரியில் சென்ற வாரம் நடந்த இன்டர்ணல் தேர்வில் பாத்திமா மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தார். இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். ‌ பாத்திமாவின் தாயாரான சஜிதா சம்பவத்தன்று முதல் நாள் இரவு முதல் அவருக்கு கால் செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால் பாத்திமா எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன சஜிதா, பாத்திமாவின் தோழி ஒருவரை தொடர்பு கொண்டு அவரைப்பற்றி கேட்டுள்ளார். உடனடியாக பாத்திமாவின் தோழியர் அவருடைய அறைக்கு சென்றுள்ளனர். ஆனால் பாத்திமா கதவை திறக்கவில்லை‌. இதனால் பதறிப்போன தோழியர் விடுதி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளனர்.

விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாத்திமா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதனால் பதறிப்போன கல்லூரி நிர்வாகத்தினர் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பாத்திமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு குறித்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் பாத்திமா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதினர்

ஆனால் இறந்த மாணவியின் குடும்பதார்கள், மாணவி பாத்திமா லத்திப் இணைதளங்களை ஆய்வு செய்த போது அதில் நோட் (குறிப்பேடு) எனும் செயலியில் அந்த மாணவி தற்கொலைக்கு காரணமாக இரண்டு குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் முதல் குறிப்பில் ஒரு பேராசிரியரின் பெயரையும், இரண்டாவது குறிப்பில் இரண்டு பேராசியர்களின் பெயரையும் தற்கொலைக்கு காரணமாக எழுதியுள்ளார். 

முதல் நோட்டில் சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியரின் பெயரும், 2-வது ரோட்டில் மிலிந்த பிராமே மற்றும் ஹேமச்சந்திரா காரா ஆகிய பேராசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இறந்த மாணவியின் கைபேசி உள்ளிட்டு இன்னும் பிற உபகரணங்கள் காவல்துறையினர் வசம் உள்ளபோது அதை அவர்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை என தெரிய வருகிறது. எனவே காவல்துறை இது குறித்து உறுதியான விசாரணை நடத்திட உத்திரவிட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் ஃபாத்திமாவின் பெற்றோர் கடிதம் அளித்தனர்.

இந்த சம்பவமானது ஐ.ஐ.டி கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாத்திமாவுக்கு நீதி வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் கருத்திட்டு வருகின்றனர். இதனால் அது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.