மதுரை இளைஞருடன் நெருங்கிப் பழகிய சென்னை நடன அழகிக்கு நேர்ந்த பரிதாபம்! 3 பேர் கைது! அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் காதலனும், அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர்.


சென்னை அனகாபுத்தூரை காயத்ரி என்பவர் மேடையில் பாட்டு பாடி நடனம் ஆடும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் மதுரை மேலூரை சேர்ந்த மீனா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவர்களும் இணை பிரியா தோழிகளாக மாறிவிட்ட நிலையில் சக்திவேல் என்பவரை காயத்ரிக்கு அறிமுகம் செய்து வைத்தார் மீனா. 

மீனாவும், சக்திவேலும் இடையே ஆரம்பித்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதை பயன்படுத்தி சக்திவேல் பலமுறை காயத்ரியிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற நம்பிக்கையில் சக்திவேல் அழைத்த போதெல்லாம் இணங்கியுள்ளார் காயத்ரி.

மேலும் சக்திவேலுக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார் காயத்ரி. ஆனால் காயத்ரியிடம் இருந்து பணத்தையும், பாலியல் சுகத்தையும் சம்பாதித்து விட்ட சக்திவேல் அவரை கழட்டி விட்டுள்ளார். மேலும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இதை அறிந்த காயத்ரி வேதனையில் மதுரை மாவட்டம் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சக்திவேல் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த அயோக்கியத் தனத்திற்கு தோழியாக பழகிய மீனாவும் காரணம் என கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேல் மற்றும் மீனாவை கைது செய்தனர்.

மற்றவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை கேள்விப்படும்போது புத்திக்கு எட்டுவதில்லை. அசம்பாவிதங்கள் தனக்கு நேரும்போது திருந்துவதற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை.