தீபிகா படுகோன் படத்துக்கு மூன்று தேசிய விருதுகள்! இரண்டு பேருக்கு சிறந்த நடிகர்கள் விருது !

66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த சமூகத் திரைப்படமாக பேட் மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் நமது கோவை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், பெண்களுக்கான மலிவு விலை நாப்கின் தயாரிப்பது குறித்த பயோபிக் ஆகும். இந்தப் படத்தில் அக்ஷய்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர்கள் விருது இரண்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. குர்ரானா மற்றும் விகாஷ் கெள்சல் ஆகிய இருவரும் சிறந்த நடிகருக்கான விருது பெறுகிறார்கள். சிறந்த இந்திப் படமாக ஆயுஷ்மான் குரானா நடித்த அந்தாதூ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இசை, பாடல் மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. ஆம், சிறந்த இசையமைப்பளர் விருது பஞ்சய் லீலா பன்சாலிக்கு, பத்மாவதி திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன், மலையாள நடிகை சாவித்திரியும் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த தெலுங்குப்படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகா நடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேஷ்க்கும் சிறந்த நடிகை சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இந்தப் படம் சிறந்த ஆடை வடிவமைப்பு விருதும் பெற்றுள்ளது. தமிழ் பிரிவில் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவான பாரம் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த சண்டைப்படம் விருது கேஜிஎஃப் பெற்றுள்ளது.