பணம், மது, பிரியாணி..! மதுரை கல்லூரி மாணவிகளை விபச்சாரிகளாக்கி சம்பாதித்த செல்போன் கும்பல்!

குளிர்பானங்களில் போதை மாத்திரைகளை கலந்து இளம் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து இருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் தல்லாகுளம் என்று இடம் அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அடிக்கடி தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. அதனை அந்த மாணவி நிராகரித்து வந்த நிலையில், அதே எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகள் வர தொடங்கின.

உடனடியாக பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் இருந்து தேசிய இளைஞர் தன்னிடம் பணம் மற்றும் நகை அதிகமாக இருப்பதாகவும் அதனை முழுவதுமாக அந்த இளம்பெண்ணுக்கு தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு பதிலாக அந்த இளைஞர் இளம்பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார்.

நேரடியாக அந்த இளம்பெண் அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி, 3 இளைஞர்களை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. 

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அதே பகுதியில் உணவகம், டிரேடர்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். அதே பகுதியில் இயங்கி வரும் அந்த தனியார் கல்லூரியில் மாணவிகளையும் வீட்டிலுள்ள எனக்கும் இளம்பெண்களின் என்பதை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர். தங்களுடைய வழிக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கை கிடைத்ததும் அந்தப் பெண்களை நேரில் அழைத்து பணம் கொடுத்து பிரியாணி வாங்கி கொடுத்து தாராளமாக செலவு செய்து வந்துள்ளனர்.

மேலும் நன்றாக பழகுபவர்களுக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரைகளை கலந்து அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இதனை வீடியோவாக எடுத்து அப்பெண்களை தொடர்ந்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர். விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு உணவு டெலிவரி செய்வது போல் சென்று மதுபாட்டில்களை டெலிவரி செய்து வந்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 3 ஆண்டுகளாக அரங்கேறி வந்துள்ளன என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் இந்த சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பிருக்குமா என்ற நோக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது தல்லாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.