துபாயிலிருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து மதுரைக்கு 23 துப்பாக்கிகள் கடத்தல்! சிக்கிய அஜ்மல், காலித், முனீஸ்பு!

22-ஆம் தேதியன்று துபாயிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது விமானிகள் மெட்டல் டிடெக்டர் வழியாக சென்றனர். அஜ்மல் கான், காலிக் முகமது, முனீஸ்ப்பு ஆகிய 3 பயணிகள் சென்று கொண்டிருந்தபோது அந்த கருவி ஒலி எழுப்பியுள்ளது.
உடனடியாக அவர்களை தனிமையில் விமான சுங்கத்துறையினர் உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது அவர்களுடைய உடைமைகளில் 23 துப்பாக்கிகள் இருந்ததை சுங்கத்துறையினர் கண்டறிந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவை விளையாட்டு கழகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இதனை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர்.
ஆனால் அவர்கள் கூறியவாறு எந்த ஒரு துப்பாக்கியும் விளையாட்டு கழகத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் துபாய் விமான நிலையத்தில் போலியான ஆவணங்களை காட்டி 3 பேரும் துப்பாக்கிகளை கடத்தி வந்துள்ளதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அவர்கள் கடத்தி வந்த துப்பாக்கியின் மொத்த மதிப்பானது கிட்டத்தட்ட 17 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. 3 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிகள் எந்த எந்த ரகத்தை சேர்ந்தவை என்பது குறித்து காவல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.