போதையில் இருந்த கல்லூரி மாணவி, போலீஸ் வேடத்தில் வந்து கற்பழித்த இளைஞர்கள்! திருச்சி அதிர்ச்சி!

காதலனை தாக்கிய கும்பல்,காதலியை கடத்தி கற்பழித்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி பெரும் பகுதி அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற எண்.ஐ.டி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியிலேயே விடுதி வசதி இருப்பதால் அங்கு தங்கி பயின்று வருகின்றனர்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட தகீரா என்ற பெண் விடுதியில் தங்கி கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவருடைய தந்தை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். தகீராவின் வகுப்பிலேயே படிக்கும் ஷாஜு என்ற மாணவனை அவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு இடங்களுக்கு சுற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சென்ற வார இறுதியில் வழக்கம் போல வெளியே சுற்றி வந்தனர். விடுதிக்கு வரும் போது ஞாயிறு அதிகாலை 3 மணி ஆனதால், கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் இருவரும் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் சற்று மதுபோதையில் இருந்துள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தங்களை காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து வைத்து இருவரையும் மிரட்டியுள்ளனர். மேலும் தகீராவை தாங்களே விடுதிக்கு சென்று விடுவதாக கூறியுள்ளனர். இதற்கு ஷாஜு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே அவரை அடித்து போட்டு தகீராவை வாகனத்தில் ஏற்றி கடத்தியுள்ளனர். யாருமில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று  தகீராவை கதற கதற கற்பழித்துள்ளனர்.

மேலும் சிலர் கற்பழிக்க முயன்ற போது மாணவி அலறி அடித்துக்கொண்டு கத்தியதால் பயந்து போன இளைஞர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த தகீரா தனக்கு நேர்ந்த இன்னல்களை தன் தோழிகளிடம் தெரிவித்துள்ளார்.

உடனே அவருடைய தந்தைக்கு இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த காவல்துறையினர் 3 இளைஞர்களில் ஒருவரை அடையாளம் கண்டு பிடித்துள்ளனர். வாழவந்தான் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் காவல்துறையினர் தேடப்படும் முக்கிய குற்றவாளியாவார். அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மணிகண்டன் கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.