எனக்கு 3 அடி..! உனக்கு மூன்றரை அடி! திருமண பந்தத்தில் இணைந்த குள்ள ஜோடி! கடலூர் சுவாரஸ்யம்!

3 அடி உயரம் கொண்ட மணமக்களுக்கு திருமணம் நடந்துள்ள சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் புவனகிரி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட மஞ்சுக்குழி என்னும் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் ஜெயபிரகாஷ். ஜெயபிரகாஷின் வயது 28. இவர் ஒரு மளிகை கடையை நடத்தி வருகிறார். இதனிடையே இவர் வெறும் 3.5 அடி உயரமானவர். ஆகையால் இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக இவருடைய உயரத்திற்கு தகுந்த பெண்ணை பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மொட்டணம்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி என்பவருடைய மகளான கலைச்செல்வியை பற்றி கோவிந்தராஜ் கேள்விப்பட்டுள்ளார். கலைச்செல்வி வெறும் 3 அடி உயரமானவர்.

ஆகையால் நேற்று இருவருக்கும் பு.முட்லூர் என்னும் கிராமத்திலுள்ள புற்று மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.