சைக்கிள் ஓட்டிப் பழகிய அழகிய சிறுமி! திடீரென பாய்ந்த 3 வெறி நாய்கள்! நொடியில் ஏற்பட்ட மரணம்! பதற வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை 3 பிட்புல் நாய்கள் கொடூரமாக விரட்டி கடித்துள்ளது.


இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே நாய்களை விரட்டியடித்துள்ளனர்.

அமெரிக்க மாகாணம் ரெட்ராய்ட் பகுதியில் வசித்து வரும் எம்மா என்ற 9 வயது சிறுமி மாலை வேளையில் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்குள்ள தெருவில் ஓட்டிவந்துள்ளார். இந்நிலையில் அங்கு உள்ள தெருக்களில் சுற்றித் திரியும் வெறிநாய்கள் குழந்தையை கொடூரமாக துரத்தி கடித்துள்ளது.

இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் நாயை விரட்ட முயற்சித்துள்ளனர். இந்நிலையில் குழந்தையை நாய் கடித்தால் குழந்தை சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்தை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனே பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். குழந்தையின் உடலை கைப்பற்றியதோடு அந்த நாய்களின் உரிமையாளரான பெரி என்பவரையும் கைது செய்து அவர் மீது கொலைக்குற்றம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு 2 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தும் ஒரு மாத சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களிடையே இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.