மெரினாவில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய 3 சடலங்கள்! சென்னைவாசிகள் பெரும் பீதி!

மெரினா கடற்கரையில், அடுத்தடுத்து 3 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.


வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதன்படி, நேற்று (சனிக்கிழமை) காலை உழைப்பாளர் சிலைக்குப் பின்புறம் உள்ள கடலோர பகுதியில், 30 வயதுடைய ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில், அதாவது காலை 11 மணியளவில் காலேஜ் மாணவனின் சடலம் ஒன்று, எம்ஜிஆர் சமாதி அருகே கரை ஒதுங்கியது. இத்துடன் அதிர்ச்சி நிற்கவில்லை. பிற்பகல் 3 மணியளவில் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த ஜெயச்சந்திரன் என்ற இளைஞர், கடல்நீரில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக கரை ஒதுங்கினார்.

இந்த 3 சடலங்களையும் கைப்பற்றிய மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 3 சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனிடையே அடுத்தடுத்து கரை ஒதுங்கிய சடலங்கள் குறித்த தகவல் பரவியதால் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பீதியுடன் இருந்தனர்.