ஒரு கிட்னிக்கு ரூ.3 கோடி கொடுக்கிறோம்! பிரபல மருத்துவமனையை நம்பி சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!

சிறுநீரகம் விற்பனை செய்வதாக கூறி 3 கோடி ரூபாய் அளவிற்கு ஏமாற்றி வரும் மோசடி கும்பலை ஈரோடு மாவட்டத்தில் போலீசார் தேடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியை உபயோகித்து மர்ம கும்பல் ஒன்று ஃபேஸ்புக்கில் அக்கௌன்டை தொடங்கியுள்ளது.

அந்த பக்கத்தில் சிறுநீரகம் விலைக்கு வேண்டும் செய்வதாக கூறி பல்வேறு விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிறுநீரக விற்பனை செய்வதன் மூலம் மூன்று கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கும் அதற்கு நாங்கள் உத்திரவாதம் என்றும் கூறி விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

சிறுநீரகம் விற்பனை செய்ய விரும்புவோர் தலா 7,500 ரூபாய் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மருத்துவமனை பிரபலமானது என்பதால் பல பொதுமக்கள் இந்த விளம்பரங்களை நம்பி சிறுநீரக விற்பனை செய்வதற்கு முன் வந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் 7,500 ரூபாய் பணத்தை  குறிப்பிட்ட வங்கி அக்கவுண்டில் செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் முன் பணம் செலுத்திய பிறகு நீண்ட நாள் ஆகியும் எந்த வித தொடர்பினையும் அந்த பேஸ்புக் முகவர்கள் சிறுநீரக விற்பனையாளர்களிடம் மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த விற்பனையாளர்கள் நேரடியாக குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர்.

அங்கு அவர்கள் விசாரித்த பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது அந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியினை அனுமதி இல்லாமல் வேறு சிலர் மோசடியாளர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் உபயோகித்துள்ளனர் என்பதனை மருத்துவமனை பொறுப்பாளர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் இது சம்மந்தமாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்து விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் இந்த மோசடியில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த மர்ம கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் சிறுநீரக விற்பனை என்று கூறி இதுவரை நாடு முழுவதும் 3 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாகவும் கண்டுபிடித்தனர். தற்போது அந்த மர்ம கும்பலை பிடிக்க தீவிரமாக வலைவீசி வருகின்றனர்.