தல மகேந்திர சிங் தோனி வீட்டிற்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

மகேந்திர சிங் தோனி வீட்டில் புகுந்து திருடிய 3 பேரை அப்பகுதி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகேந்திர சிங் தோனியின் சொந்த வீடானது நொய்டாவில் செக்டார் 104-ல் அமைந்துள்ளது. அந்த வீடு ஆனது தற்போது விக்ரம் சிங் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த வீட்டில் நேற்று இரவு 3 மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துள்ளனர். அவர் வீட்டில் இருந்து எல்இடி டிவியை திருடியுள்ளனர். 

விக்ரம் சிங் இது தொடர்பாக அப்பகுதி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஒரு குழு அமைத்து ராகுல், இக்லாக், பப்லு என்ற 3 மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் அந்த மர்ம ஆசாமிகள் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது எந்தெந்த வீட்டில் வெளிச்சம் இல்லையோ அங்கு சென்று தங்களது கைவரிசைகளை காட்டுவதாக கூறியுள்ளனர்.

விக்ரம் சிங் வீட்டில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அங்கு திருடியதாக கூறியுள்ளனர். மேலும் அவர் வீட்டிலிருந்து கேமரா ஒன்றை திருடியுள்ளனர். 9 பேட்டரிகள்,  5 இன்வெர்ட்டர்கள் முதலியவற்றில் அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த மர்ம ஆசாமிகள் விற்பனை பணியாளர்களாக வீட்டிற்குள் வந்து, இருப்போரை அடித்துப் போட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை திருடிச் செல்வதாக கூறியுள்ளனர்.இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.