கையில் துப்பாக்கி! நடு ரோட்டில் பீதி கிளப்பிய தனுஷ் ரசிகர்கள்!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ப்பட்ட சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


5-ஆம் தேதியன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. துப்பாக்கி முனையில் மிரட்டுவதும், கத்தியை காண்பித்து அச்சுறுத்தும், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து தொல்லை கொடுப்பதும் போன்ற வீடியோக்கள் வெளியாகின.

இந்த வீடியோக்கள் காவல் நிலைய உயர் அதிகாரிகளிடம் சென்றடைந்தன. உடனடியாக அவர்கள் வீடியோவில் இருக்கும் இளைஞர்களை தேடி வந்தனர். அப்போது அந்த வீடியோவில் இருந்த இளைஞர்கள் ராசிபுரத்தில் சேர்ந்த தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர் என்பதை கண்டறிந்தனர். அவர்களின் பெயர் ஸ்டான்லி, அஜித், நம்பிராஜ் என்றும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். 

அவர்களுடன் சேர்ந்து கஞ்சா வியாபாரியான சுடலைமணியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். மற்ற மூன்று பேரும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதால் பெற்றோரை அழைத்து காவல்துறையினர் மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அப்போது அவர்கள் நாங்கள் தனுஷ் ரசிகர்கள் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.

சுடலைமணி கஞ்சா வியாபாரி என்பதால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை எடுத்த 3 மாணவர்களின் நண்பரான பரத் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.