மதுரையில் ஆறு மாதத்தில் மூன்று கலெக்டர்கள்? ராஜன்செல்லப்பா லீலைதான் காரணமா?

மக்களவைத் தேர்தலின்போது மதுரைக் கலக்டராக இருந்தவர் நடராஜன். ஓட்டுப் பதிவுக்குப் பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த மையத்திற்குள் பெண் தாசில்தார் அத்து மீறி நுழைந்த விவகாரம் பெரிதானதில் நடராஜன் மாற்றப்பட்டார்.


அடுத்து பொறுப்பேற்றவர் எஸ். நாகராஜன்.தேர்தல் முடிந்தும் பொறுப்பில் நீடித்த நாகராஜனுக்கு மனு நீதி நாளில் ஒரு சோதனை வந்தது.அங்கன்வாடி பணியாளர்கள் வேலைக்கு 2017லேயே 1573 பேர் தேர்வு செய்யப்பட்டும் இன்னும் பணி ஆனை வழங்கப்படவில்லை என்று அவருக்குத் தெரியவந்தது.

காரணத்தை விசாரித்த போது,உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,உதயகுமார்,எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் சிபாரிசுகளை மீற முடியாததை அதிகாரிகள் விலாவரியாக விளக்க கடுப்பானார் கலக்டர். இரவோடு இரவாக அந்த 1573 பேருக்கும் பணியானைகள் தயார் செய்து, அவர்கள் பணியில் சேர்ந்து விட்டதாக கையொப்பமும் வாங்க வைத்தார்.

அதோடு நாகராஜன் மாற்றப்பட்டார்.அதற்குப் பிறகு சில வாரங்களுக்கு மதுரைக்கு கலக்டர் நியமிக்கபடவே இல்லை.கடைசியாக ஜூலை 1ம் தேதி மதுரை கலக்டராக ராஜசேகர் நியமிக்கப்பட்டார். நேற்று,உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அதை ராஜசேகர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவருக்கு பதிலாக டி.ஆர்.ஒ செல்வராஜ், மாநாகராட்சி ஆணையர் விசாகன்,கூடுதல் கலக்டர் பிரியங்க ஆகியோர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

கலக்டர் ராஜசேகர் திடீரென்று விடுமுறையில் சென்று விட்டார்,அவர் எந்தத் தேதிவரை விடுமுறை எடுத்துள்ளார்,எப்போது மீண்டும் பணியில் சேர்வார் என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் யாருக்கும் தெரியவில்லையாம்.அதன் பின்னணியில் இருப்பது செல்லூர் ராஜு,உதயகுமார்,ராஜன் செல்லப்பா தந்த டார்ச்சர்தான் என்கிறார்கள்.

இரண்டு அமைச்சர்கள் ஒரே சமையத்தில் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக விழா நடத்தும் போது இரண்டிலும் பங்கேற்க முடியாத நிலையில் ஒரு விழாவுக்கு மட்டும் போனால் மற்ற அமைச்சரின் கோபத்துக்கு ஆளாக நேரிடுகிறதாம்.இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வேறு வருவதால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால்தான் கலக்டர் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று மதுரை மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.