இரண்டாவது தலைநகர் போட்டியில் மூன்று நகரங்கள் வந்து நிற்கின்றன..! முதல்வர் எடப்பாடி என்ன முடிவு செய்வாரோ ..?

எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த காலங்களில் திருச்சியை தலைநகரமாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை.


இந்த நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர், மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அறிவித்தபடி திருச்சியைத்தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று திருச்சி மக்களும் அ.தி.மு.க.வினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து, கோவைக்கு மட்டும் என்ன குறைச்சல், இதனையும் தலைநகராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆக, இப்போது இரண்டாவது தலைநகர் போட்டியில் மூன்று நகரங்கள் வந்து நிற்கின்றன. எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்வாரோ..?