3 முஸ்லீம் குழந்தைகள் சுட்டுக் கொலை! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

மீரட்டில் உள்ள புலந்ஷாஹர் என்னும் இடத்தில் உள்ள நீர் நிலை ஒன்றில் மூன்று குழந்தைகளின் பிணங்கள் அழுகிய நிலையில் சனிக்கிழமை அன்று (இன்று காலை) மிதந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


3 குழந்தைகளின் உடலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருப்பது இன்னும் பெரிய அச்சத்தை அங்கிருக்கும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். 

இந்த 3 குழந்தைகளும் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.30 மணி முதல் காணவில்லை என்று இவர்களுடைய பெற்றோர்கள் மிகத் தீவிரமாக தேடியுள்ளனர். இருப்பினும் இவர்களால் குழந்தைகளை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனை அடுத்து இவர்கள் அனைவரும் இணைந்து சேலம்பூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.  போலீஸ் அதிகாரிகள் இந்த புகாரை அலட்சிய படுத்திவிட்டனர். இதனால் சரியான விசாரணை மேற்கொள்ளபடவில்லை.

பின்னர் இவர்களுடைய 3 குழந்தைகளின் பிணங்கள் அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்,  அழுகிய நிலையில் சனிக்கிழமை அன்று (இன்று காலை) கண்டு எடுக்கப்பட்டது. இந்த 3 முஸ்லீம் குழந்தைகளின் உடலிலும் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டுகளும் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட  விசாரணையில் "சல்மான் மாலிக்" என்பவர் தான் இந்த கொடூர செயலை செய்த்து இருப்பார் என்று தெரிய வந்துள்ளது. காரணம் ஏற்கனவே இந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் இவருக்கும் தீராத முன் பகை இருந்து உள்ளது. 

அதுமட்டும் இல்லாமல் இவர்கள் குடும்ப விழாவிற்கு சல்மான் மாலிக்கை அழைக்காததால் ஆத்திரம் அடைந்த அவர் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த 3 குழந்தைகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியுள்ளார் சல்மான். பல இடங்களிலும் குழந்தைகளின் இரத்தம் சிதறி இருந்துள்ளது.

இந்த மூன்று குழந்தைகளின் பெயர்கள் அப்துல்(8), அலீமா(8), அசமா(7) என்று தெரிய வந்துள்ளது.  போலீசார் இவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அவ்தேஷ் அவஸ்தி பேசுகையில், "3 குழந்தைகளுமே துப்பாக்கியால் சுட்டு தான் இறந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த வழக்கில் இன்னும் இரண்டு பேர் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக நாங்கள் தனிப்படை வைத்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்." என்று கூறினார்.

மேலும் "இந்த குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரை அலட்சியப்படுத்திய காவல் அதிகாரிகள் இரண்டு பேரை தற்காலிக வேலை நிறுத்தம் செய்து உள்ளோம்" என்று கூறினார்.