3 சிறுமிகளுடன் தேவாலயத்திற்குள் பாதிரியார் நடத்திய விபரீத ஆராதனை! தகாத இடங்களில் தொட்டதால் உஷாரான ஒரு சிறுமி!

9 வயது சிறுமிகளை தேவாலயத்தின் பாதிரியார்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது.  இந்த மாவட்டத்திலுள்ள சைரோ மலபார் தேவாலயத்தில் ஜார்ஜ் படயாட்டில் என்பவர் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் 3 சிறுமிகளிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். 

சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று 3 சிறுமிகளும் பாதிரியாரிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவளுடைய அறைக்குள் சென்றனர். அப்போது ஜார்ஜ் அந்த சிறுமிகளை தேவாலயத்திற்கு வாருங்கள் ஆராதனை செய்யலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் தகாத இடங்களில் தொட்டுள்ளார். இதனால் சிறுமிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயினர்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் நேர்ந்த இன்னல்களை பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார்.

நேரடியாக அவர் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். குழந்தைகள் நல குழுவினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த 3 சிறுமிகளும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். பள்ளியாசிரியர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். 

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களான போஸ்கோ (பிரிவு 10) மற்றும் பிரிவு 11 ஆகியவற்றில் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.