தொடர்ந்து மூன்று முறை கருச்சிதைவு! குழந்தையே வேண்டாம் என முடிவெடுத்த பெண்! பிறகு நிகழ்ந்த பேரதிசயம்!

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் அடுத்தடுத்து 3 குழந்தைகள் கர்ப்பத்திலேயே கலைந்த நிலையில் 4வது முறையாக கருத்தரித்த பெண்ணுக்கு ஜாக்பாட் பரிசு போல் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் அந்த தம்பதி மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர்.


ஓகியோ மாகாணத்தில் கோல்பி-டேனா சில்ட்ரஸ் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் குழந்தை பிறக்காமல் மனவேதனையில் உள்ளபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்காக தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர். 

கோல்பி-டேனா சில்ட்ரஸ் கடந்த 2015ம் ஆண்டு முதலில் லிங்கன் என்ற குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து 7 மாதம் பின்னர் மீண்டும் டேனா கர்ப்பம் தரித்துள்ள நிலையில் அந்த கரு 6 வாரத்தில் கலைந்து விட்டது. இதனால் மனமுடைந்த தம்பதி எப்படியாவது இன்னொரு குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் டேனா கர்ப்பம் தரித்த நிலையில் 4 வாரத்திலேயே இந்த உலகத்திற்கு வர விரும்பால் அந்த கருவும் கலைந்து போனது. இது குறித்து பல மருத்துவர்களிடம் டேனா அறிவுரை கேட்டபோது பலர் பலவிதமான காரணங்கள் கூறியதால் குழப்பமடைந்தார். பின்னர் டேனாவின் உடல்நிலை மற்றும் ரத்தத்தில் குறைபாடு இல்லை என தெரிவித்த மருத்துவர் ஒருவர் சில முறையான மருந்துகளை மட்டும் கொடுத்து உட்கொள்ளுமாறு தெரிவித்தார்.

மருத்துவர் அறிவுரைப்படி முறையாக மாத்திரைகளை உட்கொண்டு வந்த டேனா கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் கருத்தரித்தார். இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என தெரிய வந்ததால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார் டேனா. ஆனால் மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டோட மீண்டும் டேனாவின் கர்ப்ப பையை பரிசோதித்து பார்த்தபோது 4 குழந்தைகள் வளர்ந்து வருவது தெரியவந்தது.

இதனால் சந்தோஷமடைந்த குழந்தைகளுக்கு கடந்த ஜூன் மாதம் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன. குழந்தைகளுக்கு ஒட்டோ, வில்லோ, சைமன் மற்றும் வில்லிஸ் என பெயர் வைத்து தம்பதியினர் மகிழ்ந்தனர். தற்போது அந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக பெற்றோர் கண்காணிப்பில் வளர்ந்து வருகிறது.

இது மாதிரி ஒரு சம்பம் நம்ம கேரளாவுலயும் நடந்துச்சு. அது என்னான்னா ஒரு ஏழை கூலித் தொழிலாளிக்கு ஒரே பிரசவத்துல 4 புள்ளைங்க பொறந்துச்சு. அன்னன்னிக்கு பொழைப்புக்கே அல்லாடுற அந்த தம்பதி 4 குழந்தையும் எப்படி பாத்துப்பாங்க. அதனாலதான் குழந்தைகளை காப்பாத்த நிதி வேணும்னு முதலமைச்சர்கிட்ட மனுவே கொடுத்தாங்கன்னா பாருங்களேன்.