மிஷன் காஷ்மீர் அதிரடி! அமித்ஷாவுக்கு துணை நின்ற மூன்று தமிழர்கள் இவங்கதான்!

நடந்து முடிந்த மிஷன் காஷ்மீர் விவகாரத்தில் தமிழ் நாட்டைச்சேர்ந்த மூவர் முக்கிய பங்காற்றி இருப்பது இப்போது தெரியவந்து இருக்கிறது.


முதலாமவர் இப்போதைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர். அமெரிக்காவின் செகரட்டரி ஆஃப் ஸ்டேட் மைக் பாம்பியோ உட்பட உலகப் பெருந்தலைகளை இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டுப் பிரட்சினை.காஷ்மீரில் கட்டுப்பாட்டைக் கொண்டு வரவும்,அதன் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவுமான முயற்சி என்று பேசி கன்வின்ஸ் செய்தவர்.

அடுத்தது விஜயகுமார் ஐ.பி.எஸ்.முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர், சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுப்பிடித்தவர்,கடைசியாக கார்கில் போரின் போது காஷ்மீர் எல்லைபுற காவல் படைத்தலைவராக இருந்த அனுபவம் உடையவர்.இவரும் ஸ்கந்தன் ஐ.ஏ.எஸ் ம்தான் இப்போது ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர்கள். 

ஸ்கந்தன் ஐ.பி.எஸ்சும் தமிழ்நாட்டுக்காரர்தான்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்களைக் கழகத்தின் முதல் பதிவாளர்,நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் என்று தமிழகத்தில் பல பதவிகளை வகித்தவர்,கடைசியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்து அதன் பிறகு மத்திய அரசு சேவைக்குப் போனவர்.

திங்கள் கிழமையன்று டெல்லியில் அமித்ஷா ஆர்டிகிள் 370 நீக்கப் படுகிறது என்று பேசிக்கொண்டு இருக்கும்போது ,விஜய குமாரும் ,ஸ்கந்தனும் இன்னொரு ஆலோசகரான ஃபரூக் கான் ஆகியோர் ஜம்முகாஷ்மீர் கவர்னருடன் ஸ்ரீநகரில் ஆலோசனையில் இருந்தனர்.தடைகள் விலக்கப்படும் வரை மக்களுக்குத் தேவையான குடிநீர்,மின்சாரம்,உணவுப்பொருள் தேவைகள் குறித்து அந்த கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

இதோடு இன்னொரு தமிழ்நாட்டு கனக்‌ஷனும் இருக்கிறது. 370 சட்டப்பிரிவை நீக்குவது குறித்து அரசு அமைத்த குழுவுக்கு ஆலோசகராக இருந்த இந்தியாவின் அட்டர்னி ஜெனரல்.கே.கே வேனுகோபால் தாம்பரம்.கிறிஸ்த்தவக் கல்லூரி மாணவர்.இதற்கெல்லாம் துவக்கப் புள்ளியாக 1948ல் 370 சட்டப் பிரிவை வடிவமைத்ததும் தஞ்சாவூரை சேர்ந்த கோபாலசாமி அய்யங்கார்தான்.

70 வருடம் முன்பு ஒரு தமிழ்நாட்டுக்காரர் துவக்கி வைத்த சிக்கலை இந்த மூன்று தமிழர்களும் தீர்த்து வைப்பார்களா,இல்லை மேலும் சிக்கலாக்குவார்களா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.கவனிப்போம் காஷ்மீரை!