3 பீல்டர்கள் தடவு தடவு என தடவிய பந்து! ஆனாலும் பவுண்டரியை தடுக்க முடியாத பரிதாபம்! வைரல் வீடியோ!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்த்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.


இந்த போட்டியில் இலங்கை அணியை சேர்ந்த 3 பீல்டர்கள் அடுத்தடுத்து  கைக்கு வந்த பந்தை பிடிக்காமல் பவுண்டரிக்கு விட்ட வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு  இடையேயான உலகக்கோப்பை போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 36.5 ஓவர்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன்களை எடுத்தது.

ஆட்டத்தின் நடுவே நீண்ட நேரம்  மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 41 ஓவராக குறைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் சார்பாக நுவான் பிரதீப் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த போட்டியில் 27 வது ஓவரில் நுவான் பிரதீப் வீசிய பந்தை ஆப்கானிஸ்த்தான் அணியின் ஜாட்ரான் பவுலருக்கு சற்று நேராக அடித்தார். பந்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நுவான் பிரதீப் பந்தை தவறவிட்டார்.

அருகே இருந்த மலிங்கா பந்தை பிடிக்க வந்து சறுக்கி கீழே விழ, பந்து அவரையும் தாண்டி மாத்தியூஸ் அருகே சென்றது. அவரும் அந்த பந்தை பிடிக்காமல் விட்டுவிட்டு பந்தை பவுண்டரி வரை துரத்தி சென்றார். ஆனாலும் அவரால் அதை தடுக்க முடியவில்லை. 3 பீல்டர்கள் சேர்ந்து காமெடியாக பீல்டிங்கில் சொதப்பி பந்தை பவுண்டரிக்கு வீட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/pickles0303/status/1136230939477053440