என் ஒரே ஒரு மகனும் நாட்டை காக்கவே உயிரை கொடுத்துள்ளான்..! துக்கத்திலும் கண் கலங்காமல் நெகிழ்ந்த ராணுவ வீரரின் தாய்..! ஒரு ராயல் சல்யூட்!

இந்திய-சீன எல்லைப்பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவமானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாகவே இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு முக்கிய இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரு நாட்டு போர் வீரர்களும் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. 

நேற்றிரவு இந்திய மக்களுக்கு மேலும் ஒரு துயரமான செய்தி வெளியானது. உயிரிழந்த 3 ராணுவ வீரர்கள் உள்பட மேலும் 17 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டது. உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் பாபு. 

இவர் தன்னுடைய 6-ஆம் வகுப்பிலிருந்தே ராணுவ பள்ளியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். படிப்படியாக முன்னேறி தற்போது கர்னல் பதவி வரை உயர்ந்துள்ளார். இவருடைய பெற்றோருடன் இறுதியாக ஞாயிற்றுக்கிழமையன்று பேசியுள்ளார். அப்போது பெற்றோர் அங்கிருக்கும் சூழ்நிலை குறித்து விசாரித்தபோது, தொலைக்காட்சியில் வருவதை நம்ப வேண்டாம் என்றும் அங்கு நிலைமை வேறுமாதிரி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முதன்முதலில் தங்களுடைய மகன் இறந்த செய்தி கேட்டவுடன் அதனை நம்புவதற்கு சந்தோஷ் பாபுவின் பெற்றோர் மறுத்துள்ளனர். அதன்பின்னரே தங்களுக்கு கிடைத்த செய்தி உண்மையானது என்பதை உணர்ந்துள்ளனர். சந்தோஷ் பாபுவின் பெற்றோர் கூறுகையில், "தாய் நாட்டுக்காக எங்களுடைய பிள்ளையை இழந்துள்ளோம் என்று நினைத்து பெருமைப்படுகிறோம். இருப்பினும் ஒரே ஒரு மகனை பறிக்கொடுத்ததால் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளோம்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர். 

இந்த சம்பவமானது சந்தோஷ் பாபுவின் சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.