சீனத் தாக்குதலில் உயிர் நீத்த தமிழன் பற்றி அவரது மனைவி கூறிய மெய் சிலிர்க்க வைத்த தகவல்..! அவரது ஆசை என்ன தெரியுமா? ஒரு சல்யூட்!

இந்திய-சீன எல்லைப்பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை ராணுவ வீரரின் மனைவி கதறி அழுத சம்பவமானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாகவே இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு முக்கிய இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். தங்களுடைய எல்லைக்கு அருகிலுள்ள ராணுவ தளத்தில் 66 முக்கியமான சாலைகளை இந்தியா நிர்மாணித்து வந்ததால் சீனா கோபமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு நாட்டு போர் வீரர்களும் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. 

நேற்றிரவு இந்திய மக்களுக்கு மேலும் ஒரு துயரமான செய்தி வெளியானது. உயிரிழந்த 3 ராணுவ வீரர்கள் உள்பட மேலும் 17 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டது. உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவராவார்.

இவர் பல ஆண்டுகளுக்கு முன் வானதி தேவி என்ற திருமணம் செய்து கொண்டார். 10 வயதில் பிரசன்னா என்ற ஆண் குழந்தையும், 7 வயதில் திவ்யா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நாட்டிற்காக போராடி வீரமரணமடைந்த பழனியின் மனைவி கூறுகையில், "தாய் நாட்டிற்காக என்னுடைய கணவரை இழந்ததில் பெருமைப்படுகிறேன். இருப்பினும் என்னுடைய குழந்தைகள் இளம் வயதில் தங்களுடைய தந்தையை இழந்ததை நினைத்து கதறி அழுகிறேன். அவர் பிற்காலத்தில் மகன் பிரசன்னாவை கூட ராணுவத்தில் சேர்க்க எண்ணிக்கொண்டிருந்தார்" என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

இந்த சம்பவமானது கடுக்கலூர் கிராமத்தில் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.