முதல் கணவனுடன் நெருக்கமாக இருந்த மனைவி! நேரில் பார்த்த 2வது கணவன்! பிறகு நேர்ந்த கொடூரம்!

சண்டிகார்: முன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த மனைவியை கொலை செய்த இந்நாள் கணவன் கைது செய்யப்பட்டார்.


பஞ்சாப் மாநிலம், லுதியானா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த குருசரண் என்பவர் சுரிந்திரா என்ற பெண்ணை 2 ஆண்டுகள் முன் திருமணம் செய்துகொண்டார். ஆனால், சுரிந்திராவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த குருசரண், அவரை பற்றி ரகசியமாக விசாரித்துள்ளார்.

அப்போது சுரிந்திரா ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதைக் கேள்விப்பட்டதும் குருசரண் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.  இதுபற்றி மனைவி சுரிந்திராவிடம் அவர் கேட்டபோது, முன்னாள் கணவருக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், முன்னாள் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும்போல சுரிந்திரா தொடர்பு கொண்டிருந்ததை குருசரண் கண்டு ஆத்திரமடைந்தார். ஒரு நாள் மனைவியை பின்தொடர அவர் முதல் கணவன் வீட்டிற்கு சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட விசயம் போலீசாரிடம் சென்றது.  போலீசார் முடிந்த வரை முயற்சித்து சமாதானம் செய்து, இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், ஆத்திரம் தணியாத குருசரண், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே சென்றதும், கூர்மையான ஆயுதத்தை எடுத்து, மனைவி சுரிந்திராவை தாக்கினார்.

இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குருசரணை உடனே போலீசார் கைது செய்தனர்.