இரவில் தூங்கி காலையில் எழுந்தேன்..! ஆனால்..? 29 வயது பெண் முகத்தின் ஒரு பக்கம் கோணலாக மாறிய விபரீதம்..! அதிர்ச்சி காரணம்!

கலிஃபோர்னியா: மன அழுத்தத்தால் பக்கவாதம் வந்துள்ளதாக, இளம்பெண் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ஃபெர்குசன். 29 வயதாகும் இவர், ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த மன உளைச்சல் அவரது உடல் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. இதன்படி ஒரு வாரமாக அவரது முகம் கடும் குளிரால் பாதித்தது போல சில்லிட்டு இருந்ததாம்.

பிறகு, ஒரு நாள் காலை உறங்கி எழுந்ததும் கண்ணாடியில் முகம் பார்த்த ஃபெர்குசன் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆம், அவரது முகம் ஒரு பக்கம் பக்கவாதம் வந்து இழுத்துக் கொண்டிருந்துள்ளது. யாரோ முகத்தின் ஒரு புறம் ஓங்கி குத்தியது போன்ற வலி உள்ளதாக உணர்ந்த ஃபெர்குசன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற தீர்மானித்தார்.  

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மன அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கண்டறிந்தனர். இதற்கான முன் அறிகுறி எதுவும் இன்றி திடீரென பக்கவாதம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்குரிய ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிவைரஸ் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஒரு வார மருத்துவ சிகிச்சை முடிந்த நிலையில், ஃபெர்குசனின் முகம் சற்று இயல்பு நிலையை பெற்றுள்ளது. இருந்தாலும், இடது புறத்தில் ஏற்பட்ட பக்க வாத பாதிப்பு முழுவதுமாக தீரவில்லை. இதனால், அவரது வாய், கண், கன்னம், தாடை உள்ளிட்ட பகுதிகள் சற்று ஒருபுறமாக இழுத்தபடி உள்ளன.  

மன அழுத்தம் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பதோடு, நரம்புகளில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால், திடீர் பக்கவாதத்தை நாம் சந்திக்க நேரிடுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக, 40,000 அமெரிக்கர்கள் மற்றும் 10,000 பிரிட்டன் மக்கள் இந்த பாதிப்பை சந்திக்க நேரிடுவதாக, மருத்துவ ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.