28 வயதுக்குள் 6 முறை கருச்சிதைவு..! துடியாய் துடித்த இளம் பெண் 7வது முறை கர்ப்பம் தரித்தார்..! ஆனால் அதன் பின் நிகழ்ந்த சம்பவம்!

நியூயார்க்: அடிக்கடி குறைபிரசவம் நிகழ்ந்ததால், மிகவும் போராடி ரகசியமாக கருவை வளர்த்தெடுத்த பெண் பலரையும் வியப்படைய செய்துள்ளார்.


அமெரிக்காவின் பெர்க்‌ஷைர் பகுதியை சேர்ந்தவர் எமி வாட்லி (28 வயது). இவரது கணவர் வின்சென்ட் (37 வயது). இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, எமியும், வின்சென்டும் 4வது குழந்தை பெற்றுக் கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன்பேரில், எமி கர்ப்பம் தரித்தாலும், சில வாரங்களிலேயே கரு தங்காமல் உடனடியாக, குறை பிரசவம் நிகழ்ந்து, வயிற்றில் உள்ள குழந்தை இறந்துவிடுவது வழக்கமாகியுள்ளது. இப்படியாக, 6 முறை நிகழவே, கடும் மன உளைச்சல் அடைந்த எமி, 7வது முறையாக, கடந்த மார்ச் 2019 அன்று கர்ப்பம் தரித்தார். ஆனால், இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல், ரகசியமாக, தளர்வான உடைகளை அணிந்தபடி நடமாடியுள்ளார். இதற்கு அவரது கணவரும் பக்கபலமாக இருந்துள்ளார்.  

மிகவும் கவனமாக ஒவ்வொரு மாதங்களையும் நிறைவு செய்த எமி, இறுதியாக, 2019 நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்மூலமாக, தங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டதாகக் கூறும் அவர், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக இருந்ததால் குழந்தை நல்ல முறையில் பிறந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.  

ஏற்கனவே, 6 முறை குறை பிரசவம் நிகழ்ந்ததற்கு, உண்மையில் என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், எமி தம்பதியினர் திருஷ்டி காரணமாக, இப்படி ஆகியிருக்கலாம் என நம்புகின்றனர்.